img/728x90.jpg
img/728x90.jpg
இந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் பரிமாணத்தில் நிலநடுக்கம் - குடியிருப்புகள் சேதம்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் பரிமாணத்தில் நிலநடுக்கம் - குடியிருப்புகள் சேதம்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சில குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

பசிபிக் அக்கினி வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ள இந்தோனேஷியாவில் அதிக அளவிலான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு பெருமளவிலான உயிர், உடைமை சேதங்கள் ஏற்படுகின்றன.

இந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பாலி தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்கார் பகுதியில் இருந்து 29 மைல் தொலைவில் கடலுக்கடியில் 63 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகாக பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறினர். சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்த விருந்தகங்களில் இருந்து வெளியேறினர். ஒருசில கட்டிடங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

லம்பாக், கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.