img/728x90.jpg
img/728x90.jpg
சீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும் அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை - பெய்ஜிங்

சீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும் அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை - பெய்ஜிங்

சீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும், அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை என்பதைப் பெய்ஜிங் தெளிவுபடுத்தியுள்ளது.

சீனப் பொருளாதாரம் மெதுவடைந்திருப்பதால், அமெரிக்காவோடு அது வர்த்தக உடன்பாடு செய்துகொள்வது அவசியமாகிறது என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை, பெய்ஜிங்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும், ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதை மறுத்த பெய்ஜிங், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் தவறானது என்றது. வர்த்தக உடன்பாட்டை இரு நாடுகளுமே செய்துகொள்ள விரும்புகின்றன என, சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் குறிப்பிட்டார். அது ஒருதரப்பு விருப்பம் மட்டுமல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

சீனப் பொருளாதாரம், கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக ஆகக் குறைவான வளர்ச்சி கண்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அது, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 6.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டதாகப் பெய்ஜிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.