img/728x90.jpg
img/728x90.jpg
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானம் நேட்டோ விமானத்தால் இடைமறிப்பு

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானம் நேட்டோ விமானத்தால் இடைமறிப்பு

ஷ்யாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பால்டிக் கடல் பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, குறித்த விமானத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் பயணம் செய்தார்.

லிதுவேனியாவின் வான்பரப்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் பயணித்த விமானம் கடந்து சென்ற போது, நேட்டோ படைக்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எப்-18 ரக போர் விமானம் ஒன்று இடைமறித்தது.

அத்துடன், அந்த விமானத்தை தாக்குவது போன்று அச்சுறுத்தும் விதமாக மிகவும் அருகில் பயணித்தது.

அப்போது, நேட்டோ விமானத்தின் பின்புறமாக திடீரென ரஷ்யாவின் அதிநவீன எஸ்-27 ரக போர் விமானம் வேகமாக சென்றது.

ரஷ்ய போர் விமானத்தை கண்டதும் நேட்டோ படையின் எப்-18 விமானி பதறியடித்து தனது விமானத்தை வேறு திசையில் திருப்பி பின்வாங்கினார்.

இதையடுத்து, அமைச்சர் சென்ற விமானத்துக்கு ரஷ்ய போர் விமானம் பாதுகாப்பு அளித்தபடி சென்றது.

நேட்டோ போர் விமானமும், ரஷ்ய போர் விமானமும் நடுவானில் மோதல் போக்கில் செயற்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.