img/728x90.jpg
img/728x90.jpg
பாகிஸ்தானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின், பலுஸிஸ்தான் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஐவர் உயிரிழந்தனர்.

குறித்த பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) வழிபாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குண்டு வெடிப்புக்கு 8 முதல் 10 கிலோ எடை அளவிலான வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், இது ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற நான்காவது குண்டுவெடிப்பாகவும் காணப்படுகிறது.

இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.