img/728x90.jpg
ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தினை சென்றடைந்தது!

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தினை சென்றடைந்தது!

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா இதனைத் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானின் பாய்கோர் மாகாணத்திலுள்ள, ரஷ்யாவின் ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது.

இதனுடன் இணைத்து ‘ஃபெடோர்’ என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது.

குறித்த ரோபோ, சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள விண்வெளி வீரர்களுக்கு, அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, 10 நாட்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளவுள்ளது.

1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட குறித்த ரோபோ, ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த ரோபோவானது மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை, விரைவாகச் செய்யும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, சர்வதேச விண்வெளி மையத்திற்கு, ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் ஜப்பான், மனித வடிவிலான ரோபோவை அனுப்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.