img/728x90.jpg
img/728x90.jpg
கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்டன் சிவா வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்டன் சிவா வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்டன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும்.

 
20.09.1995 அன்று யாழ். மாவட்டம் மாதகல் – காங்கேசன்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “முல்லை மாவட்ட கடற்புலிகளின் மரசியல்துறை பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் அன்பு / அந்தமான், கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா / சிவம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மீதும்……, கடற்கரும்புலி கப்பன் சிவா, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரின் வழங்கல் கப்பலான “லங்காமூடித” மீதும் தமது கரும்புலித் தாக்குதலைத் தொடுத்தனர்.
 
கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”