பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக்கட்சி தனித்து வேட்பு மனு கட்சி உறுப்பினர்கள் விசனம்

பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக்கட்சி தனித்து வேட்பு மனு கட்சி உறுப்பினர்கள் விசனம்

உள்ளுராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக்கட்சி தனித்து வேட்பு மனு தாக்கல் செய்த காரணத்தினால் த.தே.கூட்டமைப் பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் இது தொடர்பில் விசனம் தெரிவித்துள்ளனர். 

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடு வதற்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் கிளி நொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, பச்சிளைப்பள்ளி, கரச்சி ஆகிய தொகுதிக ளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அண்மையில்  செலுத்தியிருந்தது. 

இந்த நிலையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால் 3 தொகுதி களிலும் த.தே.கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாமல்  தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சி உறுப்பினர்கள் கடும் விசனத்தை தெரிவித்ததுடன், தாம் முழுமை யாக ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.