img/728x90.jpg
img/728x90.jpg
மறக்க முடியாத மாமனிதர் மயிலேறும் பெருமாள்!

மறக்க முடியாத மாமனிதர் மயிலேறும் பெருமாள்!

மறக்க முடியாத மாமனிதர் மயிலேறும் பெருமாள்!

வல்வை மண் தந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் பற்றிய நினைவுப் பதிவு.

மயிலேறி மயிலேறி வல்வை மக்களால் அறியப்பட்டவர்.இளவயதில் சிறந்த ஓட்ட வீரனாகவும்,சிறந்த உதைபந்தாட்ட வீரனாகவும் விளங்கியவர்.
 
மயிலேறும்பெருமாள் அவர்கள் தனது மருத்துவக்கல்வியை தமிழ்நாடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மேற்கொண்டிருந்தார்.அங்கு படிக்கின்ற காலத்திலேயே எம்மவர்களோடு தொடர்பு கொண்டிருந்ததோடு அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டுக்காரர்களையும் எம்மோடு தொடர்புபடுத்தி விட்டிருந்தார்.
 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் எங்கள் அமைப்புப் போராளிகள் காயம்பட்ட போதெல்லாம் எவ்வித அச்சமும் இன்றி ஓடி வந்து முதலுதவிச் சிகிச்சைகள் செய்தவர். 82 சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயம்பட்ட மூவருக்குமான முதல் உதவிச் சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார்.அதே விதமாக எங்கள் முதல் மாவீரன் குண்டடி பட்டபோது முதல் உதவிச் சிகிச்சைகளை மேற்கொண்டவர்.அதன் பின்பே சங்கர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
 
அதே விதமாக மீசாலை சுற்றிவளைப்பின் போது சீலன் காயமடைந்தபோது அவன் தான் எதிரிகளின் கையில் சிக்கிவிடக்கூடாதென்பதற்காக தன்னோடு கூட வந்த அருணாவிடம் தன்னை சுட்டுவிட்டுச் செல்லுமாறு பணித்தபோது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சீலனையும் ஆனந்த்தையும் சுட்டுவிட்டு படைகளினரிடமிருந்து அருணாவும் காயப்பட்ட நிலையில் தனது இருப்பிடம் வந்து சேர்கின்றான்.அவனுக்கும் மருத்துவச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றியவர் மயிலேறும்பெருமாள் அவர்களே.
 
அன்றைய நாட்களில் இயக்கப் போராளிகள் தங்கும் அனைத்து வீடுகளும் தெரிந்த ஒருவராக அவர் விளங்கினார்.
 
இவை அனைத்துக்கும் மேலாக தேசியத்தலைவரின் அன்னையார் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் கொண்டு வரப்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டு ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
 
திருப்பி அனுப்பப்பட்ட அன்னையாரை அவர் மண்ணுலகை விட்டுப் பிரியும்வரை  ஊறணி மருத்துவமனையிலேயே அனுமதித்து பெற்ற பிள்ளையைப் போன்று கூட இருந்து பராமரித்தவர்.
 
இரவு பகல் பாராது மருத்துவமனையிலேயே தங்கியிருந்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த மருத்துவர் மயிலேறும் பெருமாள் நம்மைவிட்டுப் பிரிந்தது மாபெரும் இழப்பாகும்.
 
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தவர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
 
ஊறணி மருத்துவமனை இருக்கும்வரை மக்கள் உள்ளங்களில் என்றென்றும் மயிலேறும் பெருமாளின் நாமம் நிலைத்திருக்கும்.