img/728x90.jpg
நீங்கா நினைவுகளில் தியாகி பொன் சிவகுமாரன்

நீங்கா நினைவுகளில் தியாகி பொன் சிவகுமாரன்

நீங்கா நினைவுகளில் தியாகி பொன் சிவகுமாரன்

தமிழீழ மண்ணின் முதற் தற்கொடையாளன் தியாகி சிவகுமாரன் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ் மாணவர் எழுச்சி நாளான இன்று நீங்கா நினைவொன்று மனதில் அல்லாடுகிறது.
 
1976ஆம் ஆண்டு யூன் 5ஆம் நாள். இரண்டாவது ஆண்டு நினைவு வணக்க நாள். அண்ணாமார் வந்து அன்று பாடசாலைத் தவிர்ப்பை மேற்கொள்ளுமாறு பாடசாலையில் வைத்து வேண்டுகிறார்கள்.
 
காட்லிக் கல்லூரியில் எனது வகுப்பின் முதல்வன் நான். நானே முன்னின்று எனது வகுப்புத் தோழர்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன். பாடசாலை உசாராகிவிட கம்பு சுத்தும் ஆசிரியர்கள் சுற்றி தீவிர காவலில் இருக்க அதனிடையே பாடசாலையை காலி பண்ணும் எம் படலமும் தொடர்ந்தது. இந்த முயற்சியில் ஈற்றில் நானும் என் வகுப்பு தோழர்கள் சிலரும் எனது வகுப்பில் மாட்டிக் கொண்டோம்.
 
வகுப்புகள் நடைபெறுவதற்கான மாணவர்கள் இல்லை எனினும் தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளிலும் காவல் தொடர்ந்தது. மதியம் உணவு இடைவேளை வந்தபோது தப்பிச் சென்றுவிட்டோம். அப்போது முக்கிய ஆசிரியரிடம் வீதியில் மாட்டிக் கொண்டோம். அவர் மிரட்டினார். இதற்காக கடும் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டும் என்றார்.
 
என்னுடன் வந்த இரண்டு தோழர்களும் பின்வாங்கி விட்டனர். நான் சென்றுவிட்டேன். மறுநாள் அனைவரும் அழைக்கப்பட்டு பின்னி எடுக்கப்பட்டோம் என்பது வேறு கதை. ஆனாலும் இன்று நினைத்தாலும் அந்த அடிகள் சுகமாகத் தான் இருக்கிறது.
 
அண்ணா சிவகுமாரா நீ எற்றி வைத்த உரிமைப்போர் நெருப்பு அவ்வாறான அடிகளினூடாக எங்களுக்குள் வளர்ந்ததேயன்றி நீத்துவிடவில்லை. 45 ஆண்டுகள் ஆனாலும் நீ எங்களுக்குள் நீக்கமற நிறைந்து இன்றும் வாழுகிறாய் அண்ணா!
 
- நேரு குணரட்ணம் -