img/728x90.jpg
img/728x90.jpg
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

 தமிழக ஆறுகளையும், விவசாயத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மணல் குவாரிகளை ஆறு மாதத்திற்குள் மூடவேண்டும் என்றும், ஜல்லி குவாரிகளைத் தவிர கிரானைட் மற்றும் பிற கனிமவள குவாரிகள் மூடவேண்டும் என்றும் வெளிநாட்டிலிருந்து அரசே மணலை இறக்குமதி செய்யவேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

அளவுக்கு மீறிய வகையில் தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுவருவதற்கு இந்த ஆணை முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.
 
மேலும், சட்டப்பூர்வ மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்துள்ளது. அதை ஏற்கும் வகையில் தமிழகத்திற்கு வெளியே மணல் எடுத்துச்செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க முன்வரவேண்டும் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.
 
உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கெதிராக மேல் முறையீடு செய்வது மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும் போக்காகிவிடும். எனவே, அந்தத் தவறை செய்யாமல் உயர்நீதிமன்றத்தின் ஆணையை மதித்து ஏற்று நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அன்புள்ள
 
பழ.நெடுமாறன்
- செய்திப் பிரிவு -
தமிழர் தேசிய முன்னணி
தலைமையகம்.