img/728x90.jpg
img/728x90.jpg
சிங்கள தேசத்தில் எவன் வந்தாலும் ஆளப் போவது மகாவம்சம் தான்!

சிங்கள தேசத்தில் எவன் வந்தாலும் ஆளப் போவது மகாவம்சம் தான்!

சிங்கள தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய என்பது பல உள் / வெளி நிகழ்ச்சி நிரல்களினூடாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.

இதை மாற்றியமைக்க சிங்கள அரசியல்வாதிகள் வேண்டுமென்றால் குத்தி முறிவதில் நியாயம் இருக்கிறது.
அது அவர்களின் பதவிப் பிரச்சனை.

ஆனால் தமிழ்த் தரப்பில் இருந்து ஏன் இந்த குத்தி முறிவு?

எவன் வந்தாலும் ஆளப் போவது மகாவம்சம் தான்.

கொழுக்கட்டை/ மோதகம் போல் உருவத்தில் வேறுபாடுதானே ஒழிய உள்ளடக்கத்தில் எல்லோரும் ஒன்றுதான்.

தேர்தலை ஒருமித்து எல்லோரும் புறக்கணிப்பதனூடாக தமிழ்த் தேசம் சார்ந்து மிகப் பெரிய அரசியலை எம்மால் எழுத முடியும்.

ஆனால் நம்மவர் கூத்தைப் பார்த்தால் அது நடக்கும் போல் தெரியவில்லை.