img/728x90.jpg
img/728x90.jpg
சவேந்திரசில்வாவின் நியமனம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சட்டபூர்வத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவால் - ஐ.நாவில் கஜேந்திரகுமார்

சவேந்திரசில்வாவின் நியமனம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சட்டபூர்வத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவால் - ஐ.நாவில் கஜேந்திரகுமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடரின் பூகோள கால மீளாய்வு பொது விவாதத்தில் விடயம் 6 ன் கீழ் இன்று (23-09-2019) ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு.

HUMAN RIGHTS COUNCIL
Delivered by:- Gajendrakumar G. Ponnambalam
42nd Session
ITEM 6 – Universal Periodic Review - General Debate

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே!

நாடுகளின் மனித உரிமைகள் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ச்சியானதும் விரிவாகவும் ஆராயப்பட்டு அறிக்கையிடப்படுகின்றது என்ற வகையில் இந்த பூகோள கால மீளாய்வு அறிக்கையிடல் என்பது உண்மையில் மிகப் பெறுமதியானதும் செயற்திறன் மிக்கதுமாகும்.

2012 இல் இருந்து நாடுகளின் பெயர் குறித்தான விசேட / பிரத்தியேக அறிக்கைகள் வெளிவருகின்றது என்ற பின்னணியில் சிறீலங்கா போன்ற நாடுகளை பொறுத்தவரையில், இந்த பூகோள கால மீளாய்வு அறிக்கை என்பது மிக முக்கியமானதொன்றாகும்.

2017 நவம்பரில் நடந்த சிறீலங்கா மீதான பூகோள கால மீளாய்வு அறிக்கையின் போது சிறிலங்கா மீதான இவ்வறிக்கையின் வெளிப்பாடுகளை கவனத்தில் கொள்வதோடு மேலதிகமாக சிறீலங்காவினாலேயே இணை அனுசரணை வழங்கப்பட்ட சிறிலங்கா மீதான மனித உரிமைகள் பேரவையின் 30/1 அறிக்கையின் கடப்பாடுகளையும் மீள உறுதிப்ப்படுத்த வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியிருந்தன.

இந்த மனித உரிமை பேரவையுடனானதும், குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு அறிக்கையுடனானதுமான சிறீலங்காவின் ஊடாட்டமானது

 உண்மையாகவே மனப்பூர்வமானதா அல்லது வெறுமனே ஒரு தொடர்பாடல் உத்தியாக அட்டவணையினை பூர்த்தி செய்ய சாட்டுக்குச் செய்யப்படும் ஒரு நடவடிக்கையா என்பதே தற்போதய நிலையில் இங்கு எழுகின்ற மிக முக்கியமான கேள்வியாகும்.

2018 செப்ரெம்பர் 14 ஆம் திகதி நடந்த சிறீலங்காவின் அமைச்சரவையின் விசேட கூட்டத்தினை தலைமையேற்று நடாத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், எந்தவொரு இராணுவ உயர் அதிகாரியையும் விசாரணையின் பொருட்டு தடுப்புக்காவலுக்கு உள்ளாக்கவோ அல்லது சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கவோ முடியாதென்கிற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்.

அது மட்டுமன்றி இன்று சிறிலங்கா அரசானது அதைவிட பல படிகள் மேலே சென்று, இதே மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சிறீலங்கா மீதான அலுவலக விசாரணையின் அறிக்கையின் பிரகாரம் முக்கியமான யுத்தக்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திர சில்வா என்பவரை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக்கியுள்ளது.

மதிப்பிற்குரிய அவை தலைவர் அவர்களே!
இந்த நியமனமானது இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட்ட தமிழர்களின் முகத்தில் விழுந்த அறை என்பதோடு, மிகத்தெளிவாக, திட்டமிட்ட ரீதியில் வேண்டுமென்றே இந்த சபையின் சட்டபூர்வத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கொள்ளவேண்டும்.

எனவும் தெரிவித்துள்ளார்.