img/728x90.jpg
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத திருகோணமலை தென்னமரவடி படுகொலை 03/12/1984

தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத திருகோணமலை தென்னமரவடி படுகொலை 03/12/1984

தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத திருகோணமலை தென்னமரவடி படுகொலை 03/12/1984


தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத தென்னமரவடி படுகொலை 03/12/1984 இரு பெண்கள் மட்டும் கடும் சித்திரவதைக்கு பின்னர் ஆடைகள் எதுவும் இன்றி ஏதோவொரு விதத்தில் தப்பித்துக்கொண்டனார். தமிழர் தாயக பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் புவியியல் இனரீதியாக இணைத்து நிற்கும் கிராமமே தென்னமரவடி எனும் பழமைமிக்க தமிழ் கிராமம்.தென்னவன் எனும் தமிழ் மன்னன் தென்னமரவடி இராசாதானியை ஆட்சிபுரிந்ததால் தென்னன் மரபு அடி என அழைக்கப்பட்டதாக வரலாறுகள் சொல்கின்றன.புரதான ஆறு வன்னிமைகளோடு தென்னமரவடியும் ஒன்றாக விளங்கியுள்ளது.

 
புரதான காலத்தில் பல குறுநில தமிழ் மன்னர்கள் தென்னமரவடியை ஆட்சிபுரிந்துள்ளனர். பாண்டிய மன்னர்காலத்தில் பல பிராமணர்களும்.வேதாரணிய வைத்தியர்களும். பல குலத்தவர்களும் தென்னமரவடியில் குடியேறியதாக வரலாறுகள் சொல்கின்றன.அத்தோடு பாண்டிய மன்னர்களினுடைய மரக்கலங்கள் தென்னமரவடி துறையில் வந்தடைந்ததாகவும் குமுளமுனையில் கட்டப்படும் யானைகள் செம்மலைக்குடா தென்னமரவடி குடாக்களினூடாக தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் வரலாற்று நூல்கள் ஆதாரப்படுத்துகின்றன.
 
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தென்னமரவடி போர்த்துக்கீசர் ஆட்சிக்காலத்தில் இருந்து எதிரிகளால் மாறி மாறி முற்றுகைக்குட்பட்டதனால் தென்னமரவடி பெரும் பிரதேசமக்கள் திருகோணமலை. தம்பலாகாமம்.செம்மலை.அனுராதபுரம் என புலம் பெயர்ந்தார்கள் என்றும் அங்கே புதிய குடியேற்றங்களை நிறுவினார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. தென்னமரவடியோடு இணைந்திருந்த அமரிவயல் எனும் தொன்மைமிக்க தமிழ்கிராமம் முற்றாக அழிந்துபோனதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறாக வீழ்ச்சி கண்ட தென்னமரவடி பிரித்தானியர் வருகைக்கு பின்னரான காலத்தில் பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிதைக்கப்பட்டது. இக்கிராமம் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச 31E பிரிவின் கீழ் அமைந்துள்ளது. திருகோணமலையில் 65கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. முல்லைத்தீவையும் திருகோணமலையையும் இணைத்து நிற்பதால் வடகிழக்கை இணைக்கும் இருதய நிலமாக தென்னமரவடி அமைவுபெற்றுள்ளது.
 
முல்லைத்தீவு கொக்கிளாய்கடல் நீரேரிக்கு மறுகரையில் வடகிழக்கை பிரித்து ஓடும் பறையனாற்று கரையில் தென்னமரவடி அமைந்துள்ளது.
தென்னமரவடியின் அமைவிட சிறப்பு தமிழ் பேசும் மக்களின் ஈழ நிலப்பரப்பை இணைத்து விடும் என்பதால் தென்னமரவடி மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பு, இல்லாது அழித்தல் எனும் சதித் திட்டத்தையே மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்துவருகின்றனர்.இக்கிராமத்தை 1970 களில் திருகோணமலையில் இருந்து பிரித்து அனுராதபுர மாவட்டத்தோடும் இணைத்தனர்.பின்னர் தமிழ் அரசியல் தலைவர்களின் தொடர் அழுத்தத்தால் மீண்டும் திருகோணமலையோடு இணைக்கப்பட்டது.
 
இருந்தும் தென்னமரவடி கிராமத்தை சிங்களமயமாக்கும் பணியை சிங்களம் நிறுத்தவில்லை.1980 களில் பல தொன்மை சிறப்புடைய இக்கிராமத்தின் பல கல்வெட்டுக்களை இல்லாமல் ஆக்கினர்.அகழ்வாராட்சி என்ற பெயரில் பல வரலாற்று அடையாளங்களை திருடிச்சென்றுள்ளனர். அதை இன்றுவரை இக்கிராமத்தவரிடம் ஒப்படைக்கவில்லை.கந்தசாமி மலை பிரதேசத்தில் இன்றும் பல தொன்மை அடையாளங்களும் பழம் பெரும் முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.இதனால் இவ்வலயத்தை பௌத்தபுனித பூமி என தொல்அகழ்வாராச்சி சபை ஆக்கிரமித்துள்ளது.அத்தோடு இத்தொன்மை மிக்க தமிழ் கிராமத்தின் வயல்நிலங்களை சிங்களவர்க்கு கைமாற்றியது. அத்தோடு மட்டுமன்றி பதவியா.சிறிபுர.சிங்கபுர.13ம் கொலணி சிங்கள குடியேற்றங்களை தென்னமரவடி கிராமத்தில் அத்துமிறி சிங்களம் நிறுவியது.இதனால் தென்னமரவடி மக்கள் 1980, 1984ம் ஆண்டு காலப்பகுதிகளில் தனித்து நின்று தென்னமரவடி நிலத்தை பாதுகாப்பதற்காக சிங்கள காடையர்களோடு முரண்பட்டு மோதிக்கொன்றனர்.பல தடவைகள் சிங்கள குடியேற்றவாசிகளை விரட்டி அடித்னர்.தமக்கே உரித்தான இடியன் துவக்குகளை இவர்கள் பயன்படுத்தி சிங்களவர்களை விரட்டி அடித்த வீரம்மிக்க கிராமமாக தென்னமரவடிமக்கள் விளங்கினர்.
 
இதனால் ஆத்திரம் கொண்ட சிங்கள இனவாத அரசும் சிங்களை காடையர்களும் ஒன்றாகி பலமாகி பலதடவைகள் தென்னமரவடி கிராம மக்களை விரட்டி அடித்தனர்.காடுகளில் பலநாட்கள் தங்கிய மக்கள் சொல்லண்ணா துயர்களை அனுபவித்தனர்.அத்துமீறிய சிங்களவர்கள் இக்கிராமத்தவரின் சொத்துகளை சூறையாடி சென்றும் இருந்தனர்.மீண்டும் கிராமத்துக்குள் வந்தவர்கள் இந்நிலை கண்டு அச்சமும் கவலையும் கொண்டனர். தென்னமரவடிதமிழர்க்கும் சிங்களவர்க்கும் பகை உச்சம் கொண்டிருந்தது.
 
எந்த நேரத்திலும் தென்னமரவடி அபகரிக்கப்படும் சூழல் உருவானது.மக்கள் அச்சத்துடன் ஒவ்வோர் இரவையும் கழித்தனர்.
அன்று 1984 மார்கழி மாதம் மூன்றாம் திகதி தென்னமரவடியை அண்மித்த பகுதிகளில் வேட்டு சத்தம் பலமாக கேட்டது. தென்னமரவடியை சேர்ந்த பலரை சிங்கள காடையர்கள் கொலைசெய்துவிட்ட செய்தி பரவியது.தோட்டங்கள்.வயல் நிலங்களிற்கு சென்ற பலர் வீடு திரும்பவில்லை.பிள்ளைகள்.கணவன்மார்களை காணாது தவித்த உறவினர்கள் அவர்களைதேடி சென்றனர்.இவ்வாறு பிள்ளைகளையும் கணவன்மாரையும் தேடிச்சென்ற பல பெண்களை சிங்கள காடையர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.பலர் சிதறி ஓடியும் கடையர்களிடமிருந்து தப்பமுடியவில்லை.தாய்மார் முன்னிலையில் பிள்ளைகள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.கணவர்மார் முன்னிலையில் பல பெண்கள் அம்மணமாக்கி கற்பழித்து கொலைசெய்யப்பட்டனர்.
இந்த கொடும் செயலை சிங்களம் செய்து முடித்தது.
 
பிள்ளைகளை தேடிச்சென்ற இரத்தினம்.வேலாயுதம் மனைவி ஆகிய இருவரையும் தவிர ஏனைய எல்லோரும் கொலைசெய்யப்பட்டனர்.
சண்முகம் முருகுப்பிள்ளை 42
முருகுப்பிள்ளை அபிராமி 40
முருகுப்பிள்ளை பாலகிருஸ்ணன் 18
விநாசித்தம்பி கனகையா 45
கனகையா சேதுப்பிள்ளை 38
கந்தையா கெங்காதரன் 24
சண்முகம் சதாசிவம் 35
கணபதி வேலாயுதம்48
பூசாரி சின்னையா 65
நமசிவாயம் கலையன்18
ஐங்கரப்பிள்ளை திருச்செல்வம் 23
ஆகியோர் காடையர்களால் படுகொலை செய்யப்பட்னர்.
 
ஆனால் இரு பெண்கள் மட்டும் கடும் சித்திரவதைக்கு பின்னர் ஆடைகள் எதுவும் இன்றி ஏதோவொரு விதத்தில் தப்பித்துக்கொண்டனார்.”ஐயோ சிங்களவர் திரண்டு வாறான்கள்.எல்லோரும் ஊரைவிட்டு ஓடுங்கோ. பிடிச்சு வைச்சிருந்த எல்லோரையும் வெட்டிக்கொண்றிட்டான்கள் …”என்ற அந்த இரு பெண்களின் அலறல் தென்னமரவடியை நிலைகுலைய செய்தது.அன்றே தென்னமரவடி மக்கள் காடுகளிற்குள் தஞ்சம் புகுந்தனர்.அந்த நொடிப்பொழுதில் சிங்கள காடையர்கள் தென்னமரவடியை சூறையாடி ஊர் முழுவதையும் எரித்தனர்.
 
காடுகளிற்குள் ஒளிந்த மக்கள் கண்களில் தென்னமரவடி எனும் வளமான ஊர் எரியூட்டப்பட்டு புகைமண்டலம் வெளிவந்ததை பார்த்தனர்..ஆறாத வடுக்களுடன் கண்களில் நீர் கசிந்திட முதியோர்.இளையோர்.குழந்தைகள் என பதினெட்டு நாள் அச்சமான காட்டு வழி பயணமாக முல்லைத்தீவு.முள்ளிவளை.புதுக்குடியிருப்பு.செம்மலை போன்ற பகுதிகளிற்கு இடம் பெயர்ந்து சென்றனர். 1984ல் இல் தமிழர் தாயகத்தில் முற்றுமுழுதாக முதலில் இடம் பெயர்ந்த தென்னமரவடி கிராமத்தின் இடம்பெயர் அவலமும் தென்னமரவடி படுகொலையும் நடந்து முப்பத்து மூன்று வருடத்தை கடந்தும் இன்னும் ஆறாத துயரமாகவே தமிழர் மனங்களில் பதிந்துள்ளது.