img/728x90.jpg
விசாரணைசெய்யச் சென்ற தேம்ஸ் வலி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹார்பர் என்ற பொலிஸ் அதிகாரி கொலை - 10 பேர் கைது

விசாரணைசெய்யச் சென்ற தேம்ஸ் வலி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹார்பர் என்ற பொலிஸ் அதிகாரி கொலை - 10 பேர் கைது

கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாக விசாரணைசெய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி பேர்க்ஷயரில் நேற்றுப் புதன்கிழமை இரவு 11:30 க்கு கொல்லப்பட்டுள்ளார்.

தேம்ஸ் வலி (Thames Valley) பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹார்பர் என்ற பொலிஸ் கொன்ஸ்ரபிளே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக 13 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டு அப்பகுதி முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்ததாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் பொலிஸ் அதிகாரிகள் ஆபத்தான நிலையிலேயே தங்களது கடமைகளைச் செய்கின்றனர் என்றும் நினைவுபடுத்தியுள்ளார்.

அபிங்டன் (Abingdon) வீதிப் பாதுகாப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்ரபிள் ஹார்பர் தனது கடமைகளைச் செய்யும் நேரத்தில் கொல்லப்பட்டார் என்று பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் எங்களது எண்ணங்கள் முழுவதும் ஹார்ப்பரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனேயே உள்ளன என்று சக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஆண்ட்ரூ ஹார்பர் (வயது 28 ) நான்கு வாரங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.