img/728x90.jpg
img/728x90.jpg
ஜேர்மனியில் பிளாஸ்ரிக் பயன்பாட்டுக்கு தடை

ஜேர்மனியில் பிளாஸ்ரிக் பயன்பாட்டுக்கு தடை

ஜேர்மனியில் பிளாஸ்ரிக் பைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிய சுற்றுச்சூழல் அமைச்சர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிளாஸ்ரிக் பைகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை இயற்ற ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.

ஏனெனில் பிளாஸ்ரிக் பைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனையாளர்களுடன் போடப்பட்ட தன்னார்வ ஒப்பந்தங்கள் போதுமான பலன்களைத் தரவில்லை.

இதன்காரணமாகவே குறித்த தடை விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு முதல் உறிஞ்சு குழாய், முட்கரண்டி மற்றும் கத்திகள் போன்ற சில ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்ரிக் தயாரிப்புகளை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.