img/728x90.jpg
img/728x90.jpg
பிரித்தானியாவுடனான புதிய வெளியேறும் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு

பிரித்தானியாவுடனான புதிய வெளியேறும் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு

பிரெக்ஸிற் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றவும், பிரித்தானியாவுடனான புதிய வெளியேறும் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருடன் இந்த வாரம் இடம்பெறவுள்ள சந்திப்புகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தம் இன்றி ஐரோப்ப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தங்களது நிலைப்பாட்டினை மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயக்கம் காட்டினாலும் அவர்கள் மாற்றத்திற்கு உடன்படுவார்கள் என தான் எண்ணுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறினார்.