img/728x90.jpg
முள்ளிவாய்கால் - 10 ஆண்டுகளின் பின் ஈழத்தமிழர் வாழ்வியல், அரசியல், வளர்ச்சியா? வீழ்ச்சியா?

முள்ளிவாய்கால் - 10 ஆண்டுகளின் பின் ஈழத்தமிழர் வாழ்வியல், அரசியல், வளர்ச்சியா? வீழ்ச்சியா?

முள்ளிவாய்கால் - 10 ஆண்டுகளின் பின் ஈழத்தமிழர் வாழ்வியல், அரசியல், வளர்ச்சியா? வீழ்ச்சியா?

21ஆம் நூற்றாண்டின் கடந்த 10 ஆண்டுகள்இ மனித வாழ்வில் சாவல்களை அதிகரித்திருக்கின்றதே அன்றி குறைத்துவிடவில்லை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம். சமத்துவம், மனித உரிமைகள், உலக மயமாக்கல் எனப் பழைய முறைமைகளை உடைத்துக் கொண்டு விரிவாக்கம் அடைய முயன்ற உலகமஇ; இன்று  மீண்டும் சுருங்க ஆரம்பித்திருக்கிறது. பொது நலனில் இருந்து விலகித் தன்நலன் சார்ந்து முரண்களை வளர்க்க ஆரம்பித்திருக்கிறது. தமது இருப்பிற்கேற்ப இவர்கள் அரங்கேற்றும் மக்கள் ஆட்சி வடிவம், சனநாயகத்தை  பொய்க்கவைத்து சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. 

இந்நிலையில் தான் ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் எதிர்காலமும், அவர்கள் மீதான இனஅழிப்பு, போர்க் குற்றங்கள், மனிதாபிமானக் குற்றங்கள் குறித்த பரிகாரநீதிப் பயணத்தின் எதிர்காலமும் பெரும் கேள்வியாக எழுந்து நிற்கின்றன.; அதனை தாயக ரீதியாகவும், சர்வதேச உலகிலும்இ காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் எதிர்கொள்ளும் முறைமைகளை வடிவமைத்துக் கொள்வதிலும், அதற்கான முன்னெடுப்புகளை முன்நகர்த்துவதிலும், அதற்கான செயற்பாட்டு அங்கங்களின் ஒருங்கிணைப்பு, முறையான கருத்துப்பரிமாற்றம் என்று நீண்டு விரியும் பட்டியலில் எங்கள் தற்போதைய நிலை என்ன? எனப் பல கேள்விகள்இ முள்ளிவாய்காலின் 10 ஆண்டுகள் நினைவு நாட்களில் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன. 

பல நூற்றாண்டுகளாக ஈழத் தமிழினத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு ஆட்சிகளும், அதன் விளைவுகளும், அதனை எதிர்கொள்வதற்கான ஈழத்தமிழர் போராட்டங்களும் என்ற நீண்ட நெடும்தொடரின், தற்போதைய அத்தியாயமான சிங்கள நிலஆக்கிரமிப்பும், அதன் இராணுவ வன்முறையும் என்ற அத்தியாயத்தில், சாத்வீகமாக ஆரம்பித்த போராட்டங்கள் ஆயுதவலுகொண்டு ஒடுக்கப்பட்டபோது, தம் இனத்தை தற்காத்துக் கொள்ள ஆயுத வலுவை ஆயுதத்தால் எதிர்கொள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் தலைப்பட்டார்கள். அதன் வளர்ச்சியும், எழுச்சியும்இ தமது தாயக நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து அதில் ஒரு தமிழ் நிழல் அரசை நிறுவும் அளவிற்கு வளர்ச்சி கண்டது. அதேவேளை ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்கி, சர்வதேச தளத்தில் கையாளும் நிலைக்கு அதனை நிலைநிறுத்தியது. அதாவது சாத்வீகப் போராட்டம், தற்காப்பு ஆயுதப் போராட்டம் என விரிந்த களம் 10 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்காலில் சர்வதேச இராஜதந்திரப் போராட்டமாக அடுத்த களத்தில் வந்து நின்றது. 

இந்நிலையை எட்டும் போது பலவிடயங்கள் ஈழத்தமிழினத்தில் மாறிப்போயிருந்தன. வாழ்வியலை எடுத்துக் கொண்டால், முதற்தடவையாக இன ஓற்றுமை ஒரு பெரும் சக்தியாக எழுந்து நின்றது. ஆண், பெண் சமத்துவம் பெருமை தரும் வகையில் உயர்ந்து நின்றது. மொழிஇ கலாச்சாரம், பண்பாடு என்பற்றைக் கடந்து சமூகத்தின் அனைத்து பகுதியினருக்குமான இணைப்பும், ஆதார வசதிகளும் ஒரு வளமான தேசத்தின் எழுச்சியைச் சுட்டி நின்றன. இன்று 10 ஆண்டுகளின் பின்னர் திரும்பிப் பார்க்கும் போது அந்த உயர்வு நிலைகளைத் தொலைத்து விட்ட நிலைஇ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் பெரும் சறுக்கலை சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். போர் காலங்களிலேயே மக்கள் புனர்வாழ்விற்கான கட்டமைப்புக்கள், அவர்களுக்கான செயற்திட்டங்களுடன் தொடர் பணியாற்றின. தற்போது 10 ஆண்டுகளாக தமிழர் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணம் யாரிலோ தங்கு நிலையிலேயே உள்ளது. அன்று இதனை முன்நகர்த்திய தமிழர் சார்ந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம் போன்ற கட்டமைப்புகளுக்கான பார்வையும், அவற்றின் தோற்றுவாயும், செயற்பாடும், அவற்றின் தேவையும் மிகவும் அதிகரித்துள்ள இன்றைய நாளில், அவ்வாறான முன்னெடுப்பு ஏன் தவறிப்போனது?

ஈழமக்களின் பல்வேறு தரப்பினரின், அன்றாட அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், முள்ளிவாய்காலுக்கு முன்னர் அமைந்த பல்பரிமாணக் கட்டமைப்புக்களான, காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் பிள்ளைகளுக்கானது), செஞ்சோலை (ஆதரவற்ற பெண் பிள்ளைகளுக்கானது), செந்தளிர் (5 வயதிற்கு குறைந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கானது), வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது), அன்பு முதியோர் பேணகம், இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை அற்ற, வலுவழந்த சிறுவர் சிறுமியருக்கானது), சந்தோசம் உளவள மையம் (மனவளம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கானது), நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது), மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது), சிறீ இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த ஆண் போராளிகளுக்கானது), சீர்திருத்தப்பள்ளி, முரளி முன்பள்ளி (ஜந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப்பள்ளி), புனிதபூமி மகளீர் காப்புத் திட்டம்இ உதயதாரகை (கணவனை இழந்த பெண்களுக்கானது), பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம், பசுமை வேளாண்மை சேவை  (விவசாயிகளுக்கானது), எழுகை தையல் பயிற்சி மையம் என மக்களின் பல்வேறு பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்களின் வாழ்வு சிறக்க அமைந்த கட்டுமானங்கள் போன்று இன்று தேவைகள் அதிகரித்திருக்கும் நிலையில் தேவைப்படும் கட்டமைப்புகளின் தோற்றம் என்னவாகியது? இவற்றை சிறீலங்கா அரசு ஈழமக்களின் நலம், வளம் கருதி வடிவமைத்து ஏற்படுத்தித் தரும் என நாம் காத்திருக்கின்றோமா?

அற்றின் பெயர்களைக் கடந்து தேவைகருதிய அவற்றின் உருவாக்கமும், அவற்றின் பணியும் ஏன் மீண்டும் அமையவில்லை? இதற்கு பொறுப்பானவர்கள் யார்? ஈழத்தமிழர் வாழ்வு மீண்டும் கட்சி ரீதியாகவும், வாழ்வியலைத் தொலைத்துவிட்டு, அனைத்தும் வெறும் அரசியலாகவும் சுருங்கி, மாவீரர்கள் தங்கள் உயரிய தியாகங்களால் கட்டியெழுப்பிய ஓற்றுமை என்ற ஆத்மபலம் சிதைக்கப்பட்டு, ஈழத்தமிழினம் இந்த 10 ஆண்டுகளில் நிர்க்கதியானதிற்கு காரணமானவர்கள் யார்?

இந்த 10 ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள்,

, வடமாகாணசபை என்ற ஒரு ஆட்சி அலகை வேறு கைகளில் வைத்திருந்தோம். அது அதிகாரம் கொண்டதா? அது ஒரு தீர்வா? என்பதைக் கடந்து அதை ஒரு துரும்புச்சீட்டாகக் கொண்டு எம் மக்கள் சார்ந்து எதனைச் சாதித்தோம்?. அங்கும் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுவிட்டு, கட்சிரீதியாகவும், குழு ரீதியாகவும் எமக்குள் மோதிக் கொண்டேமேயன்றி வேறு எதனைச் சாதித்தோம்? சாதிக்க வல்வர்கள், அது குறித்த பார்வையும் செயற்பாடும் கொண்டவர்கள், விடயம், செயற்பாடு குறித்த பட்டறிவு கொண்டவர்கள் என அதற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யாது, தமது கட்சியின் மூத்த உறுப்பினர், தனது தனிப்பட்ட குழு அங்கத்தவர் எனத் தெரிவானவர்கள் எதைச் சாதிப்பார்கள்? இவர்கள் எதைச் சாதித்திருக்கலாம்!. இன்று வாழ்வியல் கட்டுமானங்கள் உருவாக்குதற்கு தேவையானதும், அரசியல் ரீதியாக முன்நகர்வதற்குமான தரவுகள், அதற்கான ஆவணங்கள் அற்ற நிலை பெரும் துயராக எழுந்து நிற்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்தான புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்திற்கான நிதியுதவிகளை எவ்விதத்திலும் எம்மால் இன்றுவரை பெரிதாகப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. திட்டவரைபுகளைத் தாருங்கள் என்று அவர்கள் கேட்டால், ஏற்ப்புடைய நேர்த்தியான திட்டவரைபுகளைக் கொடுக்கும் நிலையில் இன்றும் நாம் இல்லை. அவ்வாறே அரசியல் ரீதியாக பொய்யுரைகளையும், புனைகதைகளாயும் சர்வதேச அரங்கில் முன்வைக்கும் சிறீலங்கா அரச தரப்பை, தரவுகளும் ஆவணங்களும் கொண்டு எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்பது ஆழ்ந்த சோகத்துடன் கோபம் தரும் நிலை. 

சிறீலங்கா மனித உரிமைகள் மையம், தமிழர் விடயத்தில் ஏமாற்றம்தரும் நிலையில, தமிழர் பகுதியிலான மனித உரிமைகள் மையம் ஒன்றின் அவசியம் தவறவிடப்பட்டுள்ளது. இது குறித்த பல கருத்துப்பரிமாற்றங்களை நானே பலருடன் மேற்கொண்டும் அது கனியவில்லை. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான காலப்பகுதியில் அமைந்த நீசோர் எனப்படும் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் தமிழ் மக்களுக்கு மனித உரிமைகள் விடயத்தில் விழிப்புணர்iவை ஏற்படுத்தியது மட்டுமல்ல, தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சர்வதேச தரத்தில் ஆவணப்படுத்தி, தமிழர் நிலையை வலுப்படுத்தியது. அதுமட்டுமன்றி நீண்டு தொடர்ந்த பல படுகொலைகளையும் அவணப்படுத்துவதில் பெரும் பங்காற்றியது. அதனால் தான் அதன் தலைமையாக அமைந்த கிளி பாதர், மற்றும் அங்கத்தவர்களான ஜோசப் பரராஜசிங்கம், சந்திர நேரு போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிவைத்துப் படுகொலை செய்யப்பட்டனர். இன்றும் அவர்கள் வடிவமைத்த ஆவணங்களே தமிழர் வரலாற்றின் கரைபடிந்த அத்தியாயங்களின் ஆவணத்தொகுப்பாக உள்ளன. 

முன்னர் குறிப்பிட்டது போல், தமிழ் மக்களின் வாழ்வியல் சவாலைக் கூட வெறும் அரசியலாகப் பார்க்கும் தமிழ் அரசியலாளர்களால், அதைக் கடந்து எதனையும் சிந்திக்கவும் முடியவில்லை, செயற்படுத்தவும் முடியவில்லை. முள்ளிவாய்காலுக்கு முன்னரான தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும் அதன் செயற்பாடும், இன்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும். அதேவேளை தெரிய முயற்ச்சிக்கவும் இல்லை. தமிழர் பொருன்மியம் சார்ந்த அதன் பல்வேறு முன்னெடுப்புகளில் பொக்கிசமாக அமைந்தது தான் தமிழீழ உட்கட்டுமாணம் என்ற ஆய்வரிக்கை நூல். தமிழர் தேசத்தில் உள்ள வளங்களைக் கொண்டு அவ்அவ்ப் பிராந்தியங்களின் சுற்றாடல் சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் முன்னெடுக்கப் கூடிய பல்வேறு துறைசார் முயற்சிகள் அதில் அத்துறைசார் உள்ளுர் வெளிநாட்டு வல்லுனர்களின் பங்களிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்றுவரை அதை மூலமாகக் கொண்டு எவ்வித அடுத்தகட்ட  முயற்சிகளும் எம் மக்கள் வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவில்லை.

இன்னொரு விதத்தில் சொல்லிக் கொள்வதானால், இன்று எமது துறைசார் வல்லுனர்கள் இணைக்கப்பட்டு, தமிழர் வாழ்வியலை முன்னகர்த்தும் செயற்ப்பாட்டுப் பார்வை தகர்ந்து கிடக்கிறது. முன்னர் வெளிநாட்டில் நிறைந்து கிடக்கும் தமிழ் வைத்திய நிபுணர்கள் தமிழீழ சுகாதார பிரிவினால் உள்ளுர் வைத்தியர்கள் மருத்துவ மனைகளுடன் இணைக்கப்பட்டு, மக்கள் நலம் சார்ந்த வைத்திய முன்னெடுப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இதனால் தாயக உள்ளுர் உறவுமுறையில் ஆழமான ஒரு பற்று வளர்க்கப்பட்டது மட்டுமன்றி, மக்களின் சுகாதாரமும் மேம்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவப்பிரிவு, திலீபன் சிறப்பு மருத்தவமனை, திலீபன் நடமாடும் மருத்துவ சேவை, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை, மருத்துவ ஆராச்சிப்பிரிவு, மருத்துவக்கல்லூரி எனப் பல விரிவாக்கங்களைக் கண்டது. இன்றும் இதில் பல விடயங்கள் மக்கள் நலன்கருதி முன்னெடுக்க முடியும். ஆனால் அதை முன்னெடுப்பவர் யார்? அந்தப் பர்ர்வை அதற்கான திட்டமிடல் எந்த செயற்பாட்டு அங்கத்திடம் உண்டு?

இவ்வாறு தான் தமிழ் அரசியலும் தறிகெட்டு சிதைந்து கிடக்கிறது. தமிழருக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதில் கூட ஒருமித்த கருத்து தாயகக் கட்சிகளிடையேயும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடையேயும் கிடையாது. அதை நிலைநாட்டுவதற்கான சர்வதேச அங்கீகாரத்திற்கான பொறிமுறை, அதை முன்னெடுப்பதற்கான காலம் என்பதில் வேண்டுமென்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்றதிலேயே எமக்குள்ளேயே விவாதம் எழுவது, எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாத நிலை. இவ்வாறான குழப்ப நிலைகளுக்குப் பிரதான காரணம், தமிழர் செயற்பாட்டு அங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களில் கனிசமான பகுதி ஆதிக்கம் செலுத்தும் தமிழர் இல்லாத சக்திகளின் ஆளுமையின் கீழ் தெரிந்தோ, தெரியாமலோ புதையுண்டு கிடப்பதே. அவ்வாறான சக்திகளை புறம்தள்ளும் ஆற்றல் இல்லாதவர்களால், அவர்களுடன் பயணித்தாலும் அந்நிலையை பயன்படுத்தி தமிழர் நலன்களையும் வென்றெடுக்கும் ஆற்றலும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையுமாகும். அந்த ஆதிக்க சக்திகளின் நலன்கள் வென்றெடுக்கப்படுவதை தெரிந்தோ தெரியாமலோ உறுதிசெய்யும் இவர்களால், அதைக்கடந்து தமிழர் நலனை நகர்த்த முடியவில்லை. இங்கும் மீண்டும் சிதைவைக் கண்டிருக்கும் தமிழர் ஒற்றுமை என்ற விடயம் பூதாகரமாக எழுந்து நிற்கிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல், இச்சக்திகளால் பிளவுண்டு நிற்கும் தமிழர் அமைப்புக்களாலும், செயற்ப்பாட்டாளர்களாலும் தமிழ் சமூகமே இன்று துண்டாடப்பட்டு பந்தாடப்படுகிறது.   

இதனால் தான் பெரிதும் இவ்வாறான சக்திகளின் சேவகமாக மாறிவிட்ட தமிழ் அரசியல், தனக்கான செயற்பாட்டுப்பார்வையும், அதற்கான முன்னெடுப்பும் இன்றி அல்லாடுகிறது. முள்ள்pவாய்காலுக்குப் பின்னரான 10 ஆண்டுகளில் தமிழர் அரசியல் தமிழர் நலன்சார்ந்த முன்னேற்றம் என பெரிதாக எதனையும் குறிப்பிடும் நிலையில் இல்லை என்பது பெரும் துயர் தரும் நிலை. ராஜபக்சவின் கீழ் தான் எதுவும் நகரவில்லை என்றால், நாங்கள் கொண்டுவந்த அரசு என பெருமைப்பட்டுக் கொண்ட நல்லாட்சியிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் நிலையான தீர்வு, பரிகாரநீதி என்று முக்கிய விடயங்களிலேயே எவ்வித நிலையான முன்னேற்றமும் கிடையாது. மாறாக எம்மாலேயே நம்பிக்கையூட்டி நகர்ந்த பயணம், ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற நிலையையே ஏய்தியுள்ளது. இந்தா வருகிறது, இந்தா வரு;கிறது என்று நகர்ந்த புதிய அரசியல் அமைப்பு வழமைபோல் சவக்குழிக்கு அனுப்பப்ட்டது தான் மிச்சம். பரிகாரநீதியென ஜெனிவாவை மையம் கொண்டு சர்வதேச சமூக இணைப்புத் தளத்தில் நகர்ந்த அரசியல் தளம் கூடஇ காலநீடிப்பெனத் தொடர்ந்து சேடம் இழுக்கிறது. ஒருகதவு மூடப்படும் போது பல கதவுகள் வேண்டாம், மேலும் ஒரு கதவைக் கூடத் திறக்கும் சாணக்கியம் அற்று இருக்கம் நாமோ, எல்லாம் எமது சாணக்கியம் என வேறு முரசறைகின்றோம். 

இவ்வாறு சேடம் இழுக்கும் தமிழ் அரசியல் தாயத்திலும் சரி, புலத்திலும் சரி கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர் விடுதிகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் சவால்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதை எதிர்கொள்ளும் ஆற்றலோ, பார்வையோ, திட்டமிடலோ இல்லை என்ற நிலையில் தமிழர் வாழ்வு மேலும் உரிமை மறுப்புக்களையும் நெருக்குவாரங்களையுமே எதிர்கொள்ளப்போகிறது. அதற்கான அறிகுறிகள் ஒரு வாரத்திலேயே பல வடிவங்களில் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. 

சரி இதற்கான தீர்வுகள் தான் என்ன? என்றால், முதலில் முள்ளிவாய்காலுக்கு முன்னரான ஒரு தலைமையை இன்று தேடுவதில் இருந்தே மாற்றம் வந்தாக வேண்டும். இன்றுள்ள தலைமைகளில் ஒரு கூட்டு பொறுப்பின் ஊடாக அதை எதிர்கொள்ள முடியுமே அன்றி இன்னொரு தனிநபரால் அது சாத்தியமில்லை என்பதை புரிநது கொள்ள வேண்டும். இரண்டாவது தமிழ் அமைப்புகளிடையேயும், செயற்பாட்டாளர்களிடையேயும் குறைந்த பட்ச விடயங்களிலாவது ஒரு ஒருமித்த ஏற்பும் இணக்கப்பாடும் எட்டப்பட்டாக வேண்டும். தமிழ் செயற்பாடுகளில் ஆற்றலும், பட்டறிவும் கொண்ட ஒரு குழு திட்டமிடல் வடிவமைப்பில் இணைக்கப்பட்டாக வேண்டும். இருக்க அவ்வாறன விடயங்களில் புலனாய்வுத் திறனுடன் பலவிடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, அதன் பின்புலத்தில் தமிழ் அரசியல் ஒருங்கமைக்கப்பட்டு நகர்ந்தால் மட்டுமே மலை என நிமிர்ந்து நிற்கும் சவால்களை அதனால் வெற்றிகரமாகக் கடந்து நகர முடியும். அதுவே ஒரு இமாலய சவால் என்ற நிலையிலேயே முள்ளிவாய்காலின் 10 ஆண்டுகள் நிறைவைத் ஈழத்தமிழினம் எதிர்கொள்கிறது.

- நேரு குணரட்னம் -