img/728x90.jpg
img/728x90.jpg
தமிழர்களின் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியிலும் கட்டமைப்பு சார் இனவழிப்பு தொடர்கிறது!

தமிழர்களின் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியிலும் கட்டமைப்பு சார் இனவழிப்பு தொடர்கிறது!

தமிழர்களின் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியிலும் கட்டமைப்பு சார் இனவழிப்பு தொடர்வதாக அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வுக்கான ஆதரவினை கோரும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழர்களின் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியிலும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை தொடர்கின்றது. கண்ணியா, வெந்நீரூற்று நீராவியடி போன்ற இடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

இன அழிப்பு என்பது உயிர்களை கொல்வது மாத்திரமல்ல, அது ஒரு இனத்தவர்களின் இருப்புக்களை அடையாளங்களை அழிப்பதுமாகும்.

தமிழ் தேசத்தை தாங்குபவை கலாசாரம், நிலம், மொழி, பொருளாதாரம் என்பனவையாகும். எனவே அவற்றை அழிப்பதும் இன அழிப்பே. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனவழிப்பு தொடர்கிறது” என மேலும் தெரிவித்துள்ளார்.