img/728x90.jpg
பிரான்சில் இடம் பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவெழுச்சி நிகழ்வு!

பிரான்சில் இடம் பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவெழுச்சி நிகழ்வு!

தமிழீழவிடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவெழுச்சி நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தியாரில் இன்று (23.12.2017)  இடம் பெற்றது.

பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு சாந்திக்குமார் ஏற்றிவைத்தார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இடம் பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் .கேணல் அன்புக்குமரன் மற்றும் 2007 ஆம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தங்கமணி ஆகியோரின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தை மேற்கொண்டார்.

டிசம்பர் மாதத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு 13.01.1994 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் இடம் பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜியின் தாயார் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தை மேற்கொண்டார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்களால் சுடர் வணக்கமும் மலர் வணக்கமும் இடம் பெற்றது.
தொர்ந்து நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சாந்திக்குமார் அவர்கள் பாலா அண்ணா பற்றிய உரையும், மாணவிகளின் நடனமும், கவிதையும் இடம் பெற்றது. சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் திரு மேத்தா அவர்கள் ஆற்றினார்.
அவர் தனது உரையில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் இழப்பு எமது இனத்திற்கு பேரிழப்பு என்றும், புலம்பெயர் புத்திஜீவகள் இனிமேலாவது எமது மக்களின் உரிமைப்போருக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் இன்றைய எமது போராட்டப்பதையில் தம்மையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

இறுதியா நம்புகள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு