img/728x90.jpg
img/728x90.jpg
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா..!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா..!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலரையரங்கில் காலை 9 மணி , 10.30 மணி , நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என நான்கு அமர்வுகளாக நடைபெற்றன. அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர்.எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும், பரிசில்களையும் வழங்கிவைத்தார். 

பட்டமளிப்பு வைபவத்தில் கலைப்பீடம் (பகுதி), பிரயோக விஞ்ஞான பீடம், வியாபாரகற்கைகள் பீடம், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம் (பகுதி), விவசாய பீடம், பொறியியல் பீடம், உயர் பட்டப் படிப்புகள் பீடம், மற்றும் சித்த மருத்துவ பிரிவைச் சேர்ந்த 459 பட்டதாரிகளும், 156 டிப்ளோமாதாரிகளுமாக மொத்தம் 615பட்டதாரிகள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புதிதாக அமைக்கப்பட்ட பொறியியல் பீடத்தின் 48 பட்டதாரிகள் பொறியியல் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்று 2ம் அணியாக வெளியேறுகின்றார்கள். இவற்றுடன் இந்தப் பட்டமளிப்பு விழாவில் எல்லாப் பட்டகற்கை நெறிகளுக்குமாக 13 தங்கப்பதக்கங்களும் 4 பரிசில்களும் வழங்கப்பட்டன.