img/728x90.jpg
img/728x90.jpg
யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பல்வேறு பதவி நிலைகளுக்கு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பெயர்கள் உள்ளடக்கப்படாத நிலை!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பல்வேறு பதவி நிலைகளுக்கு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பெயர்கள் உள்ளடக்கப்படாத நிலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பல்வேறு பதவி நிலைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக உயர் கல்வி அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பட்டியலில் அமைச்சில் தமது பெயர்களை பதிவு செய்த தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பெயர்கள் பல உள்ளடக்கப்படாத நிலையில். தற்போது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வுகூட உதவியாளர் பதவி நிலைக்காக  வழங்கப்பட்ட 150 பெயர்கள் கொண்ட பட்டியலில் 69 பெயர்கள்  முஸ்லிம் பெயர்களாகும்.

வேலை உதவியாளர் பதவி நிலைக்காக வழங்கப்பட்ட 109 பெயர்கள் கொண்ட பட்டியலில் 49 பெயர்கள் முஸ்லிம் பெயர்களாகும்.

நூலக தகவல் உதவியாளர் பதவி நிலைக்காக வழங்கப்பட்ட 19 பெயர்கள் கொண்ட பட்டியலில் 7 பெயர்கள் முஸ்லிம் பெயர்களாகும்.