img/728x90.jpg
img/728x90.jpg
பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் இடம்பெற்ற நீதிக்கான பேரணி

பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் இடம்பெற்ற நீதிக்கான பேரணி

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி மாவட்டங்கள் ரீதியாக கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் ,கிளிநொச்சியில் மற்றும் அம்பாறையில் என காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கல்முனை தரவை பிள்ளையார் கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது கல்முனை தமிழ் பிரதேச செயலக முன்றலை அடைந்து, இலங்கை அரசின் கபட நாடகங்களுக்கு எதிராகவும் சர்வதேசத்தின் நேரடி தலையீட்டைக் கோரியும் கோசங்கள் எழுப்பப்படுகின்றது.உறவினர்கள் தமது உறவுகளின் நிலை என்னவென்று அறியாது கண்ணீர் சிந்தி நீதி வேண்டி நிற்பதனை காணக்கூடியதாக உள்ளது.

காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரும் அரசாங்கத்திற்கான கோரிக்கை அடங்கிய மகஜர்கள் பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் ஆகியோரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கையளிக்கப்பட்டன.

இப்போராட்டத்தில் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகியமாவட்டங்களைச்சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறவினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுஅமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர் .

கொளுத்தும் வெயிலினையும் பொருட்படுத்தாது வயதான தாய்தந்தைகள் சிறுவர்களும் பங்குபற்றியிருந்தனர்.