img/728x90.jpg
முல்லைதீவில் பேரினவாதத்திற்கு எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் பெருமளவில் மக்கள் பங்கேற்பு!

முல்லைதீவில் பேரினவாதத்திற்கு எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் பெருமளவில் மக்கள் பங்கேற்பு!

வடதமிழீழம் - நீராவியடி பிள்ளையார் ஆலய தீத்த குளம் வளாகத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ் சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவு நகரத்தில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது.

கறுப்பு துணிகளால் வாய்களை கட்டியபடியும், கறுப்புக்கொடிகளை ஏந்தியபடியும் போராட்டத்தில் பெருமளவானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது,

முல்லைதீவில் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கூட்டமைப்பின் மீதான மக்களது சீற்றம் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது.பேரணியில் கலந்து கொண்டவர்கள் எடுத்து செல்ல தயாரிக்கப்பட்ட பதாகைகளில் கூட்டமைப்பினை கடமையாக விமர்சித்து கோசங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து  முல்லைத்தீவில் 24/09/2019 இன்று. தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் சட்டத்தரணிகள் இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் பங்கேற்று தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
மக்கள் தமது கைகளில் கூட்டமைப்பினை விமர்சிக்கும் சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.