img/728x90.jpg
சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை கண்டித்து முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் போராட்டம்!

சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை கண்டித்து முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைத்தீவில் சட்டத்தரணி கே.சுகாஸ் மீது சிங்கள – பௌத்த காடையர் கும்பல் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக வடக்கு மாகாணச் சட்டத்தரணிகள் இன்று (24/09/2019) எதிர்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்வதற்கு நீதிமன்றில் தடை உத்தரவு பெற்ற சட்டத்தரணி கே. சுகாஷ் மற்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் குறித்த தடை உத்தரவு தொடர்பாக விளக்கமளிப்பதற்காக குறித்த ஆலய வளாகத்திற்குச் சென்றிருந்தனர். 

இதன்போது, அங்கு நின்ற பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான பௌத்தக் காடையர் கும்பல் சட்டத்தரணி மன்றும் சில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. 

ஆலய வளாகத்தில் சடலத்தை தகனம் செய்வதற்கு தடை விதித்த முல்லை நீதிமன்றின் உத்தரவையும் மீறி குறித்த இடத்தில் சடலம் தகனம் செய்யப்பட்டது. 

சட்டத்தரணி கே.சுகாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வடக்கு சட்டத்தரணிகள் இன்று (24/09/2019) முழுநாளும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாக வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறு சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.