img/728x90.jpg
img/728x90.jpg
யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியாக இடம்பெற்ற தியாகி லெப்.கேணல் திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியாக இடம்பெற்ற தியாகி லெப்.கேணல் திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக இருந்து தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காகவும் தமிழீழத்தின் எழுச்சிக்காகவும் தன்னுயிரை ஈகம் செய்த தியாகி லெப்.கேணல் திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியாக இடம்பெற்றது. 

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு உரிய தனி இடத்தை தொடர்ந்தும் தக்கவைப்பதில் பல்கலைக்கழக மாணவர்கள் பின்னிற்பதில்லை. 

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக இருந்த காலத்திலேயே விடுதலைக் கனவோடு களம் புறப்பட்ட திலீபனுக்கு இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாக நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

கலைப்பீட வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர் தலைவர்கள் திலீபனின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர்.

திலீபனின் நினைவு சுமந்த தமிழீழ எழுச்சிப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன.