img/728x90.jpg
img/728x90.jpg
திலீபனின் பதவிநிலையான லெப்.கேணல் என்பதை மறைக்க உத்தரவிட்ட யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்

திலீபனின் பதவிநிலையான லெப்.கேணல் என்பதை மறைக்க உத்தரவிட்ட யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (26/09/2019) யாழ்ப்பாணம் நல்லூரில் அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த திலீபனின் கட்டவுட்டில் லெப்.கேணல் என்ற திலீபனின் பதவி மறைக்கப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

யாழ். மாநகர மேயரான இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இ.ஆனோல்டின் உத்தரவுக்கு இணங்கவே இந்தப் பெயர் மறைக்கப்பட்டது.

தூபியில் இடம்பெற்றபோது

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்பாட்டுக்குழுவினரால் செய்யப்பட்டு பூர்த்தியடைந்த நிலையில் நேற்று (25) இரவு திடீரென வந்த யாழ் மாநகர துணை மேயர் ஈசன் என்பவரால் அங்கு திலீபனின் கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டது.

தூபியில் இடம்பெற்றபோது

திலீபன் வீரகாவியமாகி 32 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில் 32 அடி உயரமானதாக அந்த கட்டவுட் அமைக்கப்பட்டிருந்தது. அதில், திலீபனின் இராணுவப் பதவிப் பெயரான லெப்.கேணல் திலீபன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், வணக்க நிகழ்வு ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் அங்கு வந்த யாழ். மாநகர மேயர் ஆனொல்டின் உதவியாளர்கள் எனக் கூறப்படுவோர் மேயரின் உத்தரவு எனக் கூறி, லெப்.கேணல் என்பதை கறுப்புத் துணியால் மறைத்தனர். 

திலீபனின் இயற்பெயர் பார்த்தீபன். அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பின்னர் புலிகள் சூட்டிய பெயரே திலீபன் என்பதாகும். 

மேலும், திலீபன் முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் இருந்தவர். பின்னர் அரசியல் பிரிவிற்கு மாற்றப்பட்டு, யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக உயர்;ந்தவர். 

இந்நிலையில், விடுதலைப் போராட்டத்திற்கான அவரது தகுதி நிலையை வெளிக்காட்டும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தால் வழங்கப்பட்ட லெப்.கேணல் என்ற பதவியை இல்லாமல் செய்ய முற்பட்ட ஆனோல்ட், அடுத்த வருடம் திலீபன் என்ற பெயரையும் இல்லாமல் செய்து பார்த்தீபன் எனப் பெயர் மாற்றம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். 

கடந்த 2017 ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் ஆரம்பமான அன்று திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக தனியார் காப்புறுதிக் கம்பனி ஒன்றின் நிகழ்வை ஆரம்பித்து வைத்து அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஆனோல்ட் இந்த வருடம் திலீபனின் பதவிப் பெயரை மறைக்க உத்தரவிட்டமை தேசியப் பற்றாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது. 

தூபியில் இடம்பெற்றபோது...