img/728x90.jpg
குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இரத்து

குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இரத்து

குடிநீர் கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பூர் பழையகோட்டையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை எதிர்த்து நித்யானந்தம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்குப்பதிவு காரணமாக காவலர் பணி வாய்ப்பை இழந்ததாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,

‘நீண்ட காலமாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள்.

அதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் வழக்கு பதிவு செய்வது அரசு இயந்திரத்தின் பக்குவமின்மையை காட்டுகிறது’ என தெரிவித்தார்.

மேலும் திருப்பூர் பழையகோட்டையில் 2017 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.