நியதிகளும் நிபந்தனைகளும்

களத்தில் இணையத்தில் வெளியிடப்படும் எழுத்துக்கள், புகைப்படம், காணொளி மற்றும் காணொலிவடிவிலான சகல படைப்புக்களும் பாதுகாக்கப்பட்டவை. ஆசிரியரிடம் இருந்து எழுத்து மூலமான முன் அனுமதி இன்றி எவரேனும் களத்தில் படைப்புக்களை மறுபிரசுரம் செய்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

விளம்பர கொள்கை

வர்த்தக நிறுவனங்கள் தமது வியாபாரங்கள் மற்றும் சேவைகளை களத்தில் இணையத்தளத்தில் விளம்பரம்செய்து தமது வியாபாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம். அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் தமது விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புக்களை பிரசுரம் செய்து பயன்பெற முடியும்.

எமது ஆசிரியர் பீட கொள்கை மற்றும் ஒழுக்கக் கோவைக்கு அல்லது எவரையும் அவதூறு செய்யும் வகையிலோ வெறுப்புணர்வை தூண்டுகின்ற வகையிலோ அமைந்த அல்லது இழிவான மற்றும் தமிழ்த் தேசியத்திற்க்கு பங்கம் விளைவிக்கும் விளம்பரங்களை நிராகரிக்கும் உரிமை "களத்தில்" க்கு இருக்கிறது.

எமது ஆசிரியர் பீட கொள்கை மற்றும் ஒழுக்கக் கோவைக்கு அல்லது எவரையும் அவதூறு செய்யும் வகையிலோ வெறுப்புணர்வை தூண்டுகின்ற வகையிலோ அமைந்த அல்லது இழிவான மற்றும் தமிழ்த் தேசியத்திற்க்கு பங்கம் விளைவிக்கும் விளம்பரங்களை நிராகரிக்கும் உரிமை "களத்தில்" க்கு இருக்கிறது.

விளம்பரதாரர்களினால் எமக்கு தரப்படும் விளம்பரங்கள் சரியானவையாகவும், சட்டபூர்வமானவையாகவும் பதிப்புரிமை சிக்கல்கள் எதுவும் இன்றி அமைவதை உறுதிப்படுத்துவது விளம்பரதாரர்கள் பொறுப்பு ஆகும்.

விளம்பரதாரர்கள் சார்பாக "களத்தில்" இணையத்தளத்தினால் வடிவமைக்கப்படும் விளம்பரங்களின் பதிப்புரிமை களத்தில் இணையத்திற்க்கே உரித்தானது. இந்த விளம்பரங்களை வேறு எங்கேனும் மறு பிரசுரம் செய்வதானால் எம்மிடம் முன் அனுமதி பெறவேண்டும்.

மேலே விபரிக்கப்படட நியதிகளுக்கு நிபந்தனைகளுக்கு அமைவாக விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களை தாமே தயாரித்து எமக்கு வழங்குவதையே விரும்புகிறோம்.

பணம் செலுத்துதல்

உங்கள் விளம்பரத்திற்கான கட்டணத்தை செலுத்தி, பதிவுசெய்தவரின் பெயர், நிறுவனத்தின் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் விளம்பரத்திற்கான விபரங்கள் அல்லது விளம்பர வடிவமைப்பு என்பவற்றை advertising@kalaththil.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

தங்கள் கட்டணம் மற்றும் விளம்பரங்களை உறுதிப்படுத்திய பின்னர் உங்கள் விளம்பரம் வெளியிடப்படும்.

விளம்பரதாரர்களும் அவர்களது வாடிக்கையாளர்களும்

எம்மால் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பில் விளம்பரதாரர்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்துக்கும் "களத்தில்" க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தகவல் பாதுகாப்பு

விளம்பரதாரர்களினால் வழங்கப்படும் சகல தகவல்களும் பாதுகாப்பாக இரகசியமாக வைக்கப்படும் என்பதுடன் அவை எந்த சந்தர்ப்பத்திலும் மூன்றாவது தரப்புக்கு பகிரப்படமாட்டாது.

நியதிகளிலும் நிபந்தனைகளில் மாற்றம் செய்தல்

மேலே விபரிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் விளம்பரதாரர்கள் மற்றும் வாசகர்களுக்கு அறிவிக்காமல் மாற்றம் செய்யும் உரிமையினை "களத்தில்" கொண்டிருக்கிறது.